திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிபபது தொடர்பாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடையே தவமணி மற்றும் செல்வம் ஆகிய இரு தரப்பினரிடையே பாடு பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததால், இது தொடர்பாக வருவாய் துறையினர், மீன்வளத்துறை, காவல் துறை என பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் தவமணி தரப்பினர் 11 மாதங்களாக பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருவதாகவும், ஆனால் செல்வம் தரப்பினர் மீன் பிடித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தவமணி தரப்பினர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, முகப்பு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கு வந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி, தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment