மத்திய அரசின் திட்டங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து மத்திய நகர கட்டமைப்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன், பொது கழிப்பிடம் திட்டம், பூங்கா பராமரிப்பு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்படுகிறது மற்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பயனாளிகளுக்கு திட்டங்கள் முடிக்கப்படுகிறதா? மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளுக்கு திட்டங்களுக்கு போதிய தொகை வழங்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய நகர கட்டமைப்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் மத்திய அரசின் திட்டங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவது குறித்து பாராட்டு தெரிவித்த அமைச்சர் மேலும் மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்த மத்திய அமைச்சர் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து கேட்டு அறிந்தவுடன் மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.
No comments:
Post a Comment