ஆர்டர் கொடுப்பதுபோல் நடித்து ரூ25 ஆயிரத்தை திருடிய நபர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

ஆர்டர் கொடுப்பதுபோல் நடித்து ரூ25 ஆயிரத்தை திருடிய நபர்.

பூந்தமல்லி அருகே பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து ஹோட்டல் கல்லா பெட்டியில் இருந்து இருந்த 25 ஆயிரம் ரூபாயை ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (நவ.03) காலை ஊழியர் ஒருவர் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.


அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்த போது கடை உரிமையாளரைப்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து, ஊழியர் கடையின் உள்ளே சென்ற நேரம் பார்த்து கல்லாப்பெட்டியில், இருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.


பின்னர், இதனையறிந்த உணவக உரிமையாளர் உடனடியாக, இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad