திருவள்ளூர் மத்திய ஒன்றியம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தாமரைப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் கோடு வெள்ளி தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி, ஆகியோர் பேசினர் இதில் பேசிய அமைச்சர் ஆவடி.சாமு. நாசர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிப்பெற தொண்டர்கள் அயராமல் இப்பிருந்தே உழைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எப்படி கலைஞர், நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியும் தேர்வு செய்தாரோ அதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமராகவும் குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும். அதற்கு நாமெல்லாம் அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில மாணவரணி துணை செயலாளர் ஜெரால்டு, நிர்வாகிகள் வி.ஜே. சீனிவாசன், எம்.குமார், முனுசாமி, டி பாஸ்கர், இ சுப்பிரமணி, நாகலிங்கம், உமா சீனிவாசன், லோகநாதன், ஜி.பாஸ்கர், அன்பு, ஸ்ரீதர், நாராயணசாமி,சுப்ரமணி, ஆளவந்தான், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் இளைஞர் அணி அமைப்பாளர் சரத்குமார் நன்றி கூறினார்,
No comments:
Post a Comment