நேற்று காலை இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் நிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நிதியின் செல்போனை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிதியின் தற்கொலைக்கு ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர்தான் காரணம் என, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நிதியின் பெற்றோர் கூறியதாவது: ''நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத், ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தோம். அப்போது குடும்ப பிரச்னை காரணமாக ரேவதியிடம் இருந்து இரண்டு சவரனை வாங்கி அடகு வைத்துள்ளோம்.
தற்போது அந்த வீட்டிலிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்று விட்டோம். இந்த நிலையில் வினோத் அவரது மனைவிடம் இருந்து தாங்கள் ஏழு பவுன் நகை வாங்கி விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறு கேட்டு வீட்டிற்கு வந்தார். ஆனால் நாங்கள் இரண்டு பவுன் நகையை மட்டுமே வாங்கியதாக தெரிவித்த நிலையில், திருவேற்காடு போலீசில் ஏழு பவுன் நகையை வாங்கியதாக புகார் அளித்தார்.
No comments:
Post a Comment