திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் கடந்த (15.10.2022) சனிக்கிழமை அன்று நடைபெற்ற அப்துல் கலாம் மற்றும் சமூக நல அறக்கட்டளை நடத்தும் பாரத ரத்னா டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா பிறந்தநாளில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு இளம் கலாம் விருது வழங்குதல் நிகழ்ச்சி அப்துல் கலாம் நேர்மை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவலாங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரபாகரன், பாவனா, காவியா, தியா, பார்கவி, ஜனனி மற்றும் புருஷோத் ஆகியோர் சிலம்பம் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் இந்த மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். இந்நிகழ்ச்சியில் சிலம்பம் மாஸ்டர் சரண்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் சந்தியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment