பள்ளிக்கு செல்லும் நேரங்களில் முறையாக பேருந்தை இயக்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் மாநகர அரசு பேருந்துகள் முறையாக பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரங்களில் இயக்கப்படாததை கண்டித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் பாதிக்கபட்ட மாணவர்கள் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சர்வீஸ் சாலையில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு வந்த கவரப்பேட்டை போலீசார் இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் சமரசம் மேற்கொண்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் சென்றனர்.
No comments:
Post a Comment