கால்வாய்களுக்கு இடையே உள்ள சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு சுமார் 20ஆண்டுகள் ஆவதால், ஆங்காங்கே உடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கால்வாயில் மழைநீர் செல்வதாலும் சாலையின் ஓரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம் இந்த சாலையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் இன்று(அக்.16) எம்.சான்ட் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி, சாலை ஓரம் ஏற்பட்ட மண் அரிப்பால் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது சாலையில் கிராம மக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனை அடுத்து பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் போராடி லாரியை மீட்டனர். சாலையை சீரமைக்கவும், கால்வாய்க்கு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment