தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பருவமழை துவங்கப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்க்கீஸ் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு பருவமழை துவங்கவதுற்க்கு முன்னரே அதற்கான நடவடிக்கைகளும், முன்னெடுப்பு கள நிலவரங்களையும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து துறை அதிகாரிகளிடத்திலும் எவ்வாறு துரிதப்படுத்தப்பட்டுள்ளது என விரிவாக கேட்டறிந்தார்.
இதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அனைத்தும் பாதிப்படையும் இடங்களில் துரிதமாக சென்று நிவர்த்தி செய்திட அதிகாரிகளுடைய பணிகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், கோவிந்தராஜ், கணபதி, மற்றும் ஆவடி உதயகுமார், மற்றும் நகரமன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment