அயப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!! - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

அயப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!!


ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் உத்தரவின் பேரில்,  இன்று (13.10.2022), T10.திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர்,  விஜயராகவன் மற்றும் காவலர்கள் அய்யப்பாக்கம் வாட்டர்  டேங்க், அருகே  வாகன சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த  நபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து சோதனை மேற்கொண்டதில் டேனியல் என்பவர் என்பது தெரியவந்தது. 


இவர்  சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா  கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட டேனியல்   மீது T10. திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


2 கிலோ கஞ்சா,  ரூபாய் 10,000/- இரண்டு கைபேசிகள் மற்றும் இரு சக்கர வாகனம் (TN12 U 6687 Dio) ஆகியவைகள்  கைப்பற்றப்பட்டது. அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளார். சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் அய்யப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  நபரை கைது செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்ட T10 திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர், (ச&ஒ) மற்றும் காவலர்களை பாராட்டினார். 

No comments:

Post a Comment

Post Top Ad