கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறையினர்.! - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 October 2022

கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறையினர்.!

திருவள்ளூர் மாவட்டம் நெ.39, நம்பெருமாள் தெரு, ஆவடியில் வசிக்கும்  பசுபதி என்பவர்,  தான் ஆவடி,  பூந்தமல்லி ஹ ரோட்டில் உள்ள எம்.கே.எஸ். வளாகத்தின் உரிமையாளராக இருப்பதாகவும், அதில் 13 கடைகள் வாடகைக்கு விட்டு உள்ளதாகவும்,  அந்த கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் ஷட்டரை உடைத்து, பணம், கேமரா, லேப் டாப், ஆயத்த ஆடைகள் போன்றவற்றை திருடிச் சென்றதாக T6.ஆவடி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள்,  இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும், திருடப்பட்ட சொத்தை மீட்கவும் உத்தரவிட்டார்.  


அருணாசலேஸ்வரர், ஆய்வாளர், T6.ஆவடி காவல் நிலையம், குற்றப்பிரிவு அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தகவலின் பேரில் பருத்திப்பட்டு சந்திப்பில் வாகன சோதனையில் வினோத் (எ) வாண்டு, மகேந்திரன்,  தினேஷ்குமார் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து ரூ.3,11,500/- ரொக்கம், ஒரு லேப்டாப், ஒரு தொழில்முறை ஸ்டில் கேமரா, மூன்று கைபேசிகள் மீட்கப்பட்டன. 


விசாரணையில்,  T10. திருமுல்லைவாயல் காவல் நிலையம், மற்றும் T7. டேங்க் ஃபேக்டரி காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற கடைகளின் ஷட்டரை உடைத்து திருடிய 14 திருட்டு சம்பவத்தில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும்  பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- IIல் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்ப்படுத்தப்பட உள்ளனர்.

.

சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் அணையரகம் அவர்கள், இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த T6. ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad