திருவேற்காட்டில் பராமரிப்பு காரணமாக எரிவாயு தகன மேடை மூடல். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 October 2022

திருவேற்காட்டில் பராமரிப்பு காரணமாக எரிவாயு தகன மேடை மூடல்.

திருவள்ளுர் மாவட்டம்,  திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் உள்ள எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக 20 நாட்கள் மூடப்படுகிறது என்று நகர மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி தெரிவித்துள்ளார்..


இது தொடர்பாக நகர்மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி கூறியதாவது . திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் எரிவாயு தகனம் மேடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தகன மேடையில் திருவேற்காடு சுந்தரசோழபுரம், கோலடி உள்ளிட்ட திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த பொது மக்கள் சடலங்களை கொண்டு வந்து தகனம் செய்கின்றனர்.


இதற்கிடையில் தகன மேடையில் உள்ள எந்திரங்களை ஆண்டு தோறும் பராபரிப்பது வழக்கம் அதன் அடிப்படையில் தகன மேடையின் பராமரிப்பு பணிகளை  மேற்கொள்வதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை (20நாட்கள்) எரிவாயு தகன மேடை தற்காலிகமாக மூடப்படுகிறது.


இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிந்து மறுபடியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எரிவாயு தகன மேடை திறந்து செயல்பாட்டிற்கு வரும் வரை .இந்த தகன மேடையின் எதிரே உள்ள எரிமேடையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நகர மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி தெரிவித்துள்ளார்.அப்போது நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad