திருவள்ளுர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு நகராட்சி இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது, இந்து முன்னணி தலைவர் முருகானந்தம் தலைமையில் ஜந்தாவது நாளான இன்று சிறப்பு பூஜை நடந்தது.அதன்பின் விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக திருவேற்காடு பாஜக மண்டல் தலைவர் முருகன் அவர்களின் முன்னிலையில் கொடியசைத்து, மேளதாள முழங்க ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட மகளிரணி தலைவி வாசுகி, மாவட்ட நிர்வாகி லெனின், மண்டல் செயலாளர் கணபதி, மண்டல் தலைவி ரேவதி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள்,பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
No comments:
Post a Comment