பைக் மீது லாரி மோதியதில் மருத்துவ கல்லூரி மாணவி பலி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

பைக் மீது லாரி மோதியதில் மருத்துவ கல்லூரி மாணவி பலி.


தூத்துக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


இவரது மகள் சுபிதா (21). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார், இந்த நிலையில் நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்ததை அடுத்து நண்பர்களுடன் விழா கொண்டாடிவிட்டு மாலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சுபிதாவின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சுபிதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான சுபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக லாரி ஓட்டுநர் தன்ராஜ் (27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad