சுடுகாட்டுக்கு இடமும் நிதியும் ஒதுக்கியும் கிராம மக்கள் அவதி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 September 2022

சுடுகாட்டுக்கு இடமும் நிதியும் ஒதுக்கியும் கிராம மக்கள் அவதி.

ஆவடி அடுத்த அணைக்கட்டு சேரியில் சுடுகாடு அமைக்க நிதி ஒதுக்கிய நிலையில், அதன் பணிகளை துவங்க கலெக்டர் விரைந்து உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூந்தமல்லி வட்டம், சோராஞ்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், அணைக்கட்டு சேரி கிராமம் உள்ளது.


இங்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம்இந்த கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறைப்படுத்தப்பட்ட சுடுகாடு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், இறந்தவர் உடலை கூவம் ஆற்றங்கரை கடந்து, மறுபுறம் உள்ள ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்து வந்தனர்.மழைக் காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது, இடுப்பளவு தண்ணீரில் தீயணைப்பு துறையினர் உதவியுடன், உடல்களை படகிலும், தோள் மீது சுமந்து சென்றும் அடக்கம் செய்தனர். 


இவ்வாறான சூழலில், இறந்தவர் உடலுடன் குடும்ப உறுப்பினர் சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டது.இப்பகுதி மக்கள் சுடுகாடு கேட்டு, பல போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை.


இந்நிலையில், அணைக்கட்டுசேரிக்கான சுடுகாடு எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து, அப்பகுதி வழக்கறிஞர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.தொடரும் அவலம்அந்த மனு மீது பதிலளித்த பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், 'சோராஞ்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பட்டாபிராம் ஜெ.ஜெ.நகரில், அரசுக்கு சொந்தமான களம் புறம்போக்கு நிலத்தில், 30 சென்ட் இடத்தில் அனைத்து வசதிகளுடன் சுடுகாடு ஏற்படுத்த, 21 லட்சம் ரூபாய் ஒதுக்கி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கறிஞர் பெஞ்சமின் மோசஸ் கூறியதாவது:அணைக்கட்டு சேரி பகுதி மக்களின் அடிப்படை தேவையான சமத்துவ சுடுகாடு வேண்டி, இப்பகுதி மக்களும் நாங்களும் பல சட்ட போராட்டங்களும் நடத்தினோம். அதன் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் அணைக்கட்டு சேரி மக்களுக்கு சுடுகாடு அமைப்பதற்கான நிலத்தையும், நிதியையும் ஒதுக்கியுள்ளது. மழைக்காலம் தீவிரமடையும் முன் கலெக்டர் உத்தரவிட்டு பணிகள் துவங்கி முடிந்தால், உடல்களை படகில் எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் அவலம் தொடராது. இவ்வாறு அவர் கூறினார் 

No comments:

Post a Comment

Post Top Ad