போக்சோ வழக்கில் 14 ஆண்டுகள் சிறை திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 30 September 2022

போக்சோ வழக்கில் 14 ஆண்டுகள் சிறை திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.


கடந்த 10.01.2016 அன்று T7ஆவடி காவல் நிலையத்தில்  16 வயது சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என  கொடுத்த புகாரின் பேரில், சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இவ்வழக்கு விசாரணையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது சம்மந்தமாக சிறுமியின்  வீட்டிற்கு அருகே வசிக்கும் ஜெய்கணேஷ் என்பவர் மீது T7.டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணையை முடித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (29.09.2022)  ஜெய்கணேஷ்  (36), த/பெ.ஏழுமலை, என்பவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.4,000/- அபராதமும் விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பு வழங்கினார். 


தீர்ப்பின் அடிப்படையில் எதிரி ஜெய்கணேஷ்(36), புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க நீதிமன்றம் ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது, சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப  ஆவடி காவல் ஆணையாளர்   ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் வழக்கில் விசாரணை முடித்து  தண்டணை பெற்று தந்த கோபிநாத், ஆய்வாளர்  T7 ஆவடி காவல் நிலையம் (ச&ஒ) மற்றும் காவல் ஆளினர்களை வெகுவாக பாராட்டினார். 

No comments:

Post a Comment

Post Top Ad