திருவேற்காடு அருகே 2கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

திருவேற்காடு அருகே 2கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு.

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து புதிதாக ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ள நிலத்தை மீட்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சென்னை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் அன்புக்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததில் புதிதாக கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர்கள், திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள், பூந்தமல்லி வருவாய்துறையினர் அந்த ஆக்கிரமிப்பை நேற்று அகற்றி கோயில் நிலத்தை மீட்டனர்.


அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசைகள், கட்டுமானப் பொருட்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 5 ஆயிரம் சதுர அடி நிலம் அறநிலையத்துறையினரால் மீட்கப்பட்டது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுபோல கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணி தொடரும். அதையும் மீறி ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


பின்னர் அந்த இடத்தில் கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் இது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி திருவேற்காடு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad