திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
இக்கோயிலில் புணரமைக்கப்பட்டு கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது, இதனையடுத்து சிறுவாபுரி தலைமை குருக்கள் தலைமையில் பாலாலயம் பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் சித்ராதேவி, காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், செயல் அலுவலர் செந்தில்குமார்,ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகரன், சின்னம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, வடக்கு நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி முதலியார், சின்னம்பேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment