திருத்தணி மா.பொ.சி சாலையில் திருத்தணி எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ளது .இந்த அலுவலகத்திற்கு எம்எல்ஏ அவ்வப்போது வந்து தொகுதி மக்கள் குறைகளை கேட்டு அறிந்தும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்கும் மனுக்கள் வாங்குவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் பூட்டியே இருக்கிறது. இதனால் தொகுதி மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகள், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மனுக்கள் எம்எல்ஏவிடம் கொடுக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
அவரது வீட்டிற்கு வரும் தொகுதியில் முக்கியமானவர்களின் கோரிக்கைகள் மட்டும் மனுவாக பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு சிபாரிசு செய்து வருகிறார், எம்எல்ஏ அலுவலகம் திறந்து வந்து மனுக்கள் பெற்றால் தொகுதியின் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குறைகளை கூறி மனு கொடுப்பார்கள்.
எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டியே இருப்பதால் தொகுதி மக்கள் ஏமாற்றுடன் திரும்பி செல்கின்றனர் மேலும் அலுவலகம் பராமரிப்பின்றி உள்ளது .எனவே எம்எல்ஏ அலுவலகம் திறந்து ஓட்டு போட்ட மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர் இது குறித்து திருத்தணி எம்எல்ஏ சந்திரன் கூறியதாவது எம்எல்ஏ அலுவலகத்தில் சிறு பழுது பார்ப்பு பணிகள் இருக்கின்றது அதனால் விரைவில் அலுவலகம் திறந்து மக்கள் குறைகள் திறக்கப்படும் இவ்வாறு அவர் அலட்சியமாக கூறிகிறார்.
No comments:
Post a Comment