திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தி தீமிதி திருவிழா நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர் முன்னதாக குளக்கரை பகுதியில் இருந்து அக்னி சட்டியுடன் கரகமாடி சுவாமி ஊர்வலமாக கொண்டு வந்தனர் பின்னர் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதில் சிலம்பாட்டம் கரகாட்டம் வான வேடிக்கை என சிறப்பாக கொண்டாடினர் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தவாறு பங்கேற்றனர்.
No comments:
Post a Comment