இக்கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் மேல் தளத்தில் தங்கும் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(வயது19), என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்துள்ளார். இன்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குள் இருந்தார் நீண்ட நேரம் ஆகியும் சுமதி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன சுமதி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அவரது பெற்றோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு வந்தனர்.
அங்கு தனது மகள் இறந்ததை கண்டித்து சாலை மறியல் ஈடுபட முயன்றவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட சுமதியின் செல்போனை பறிமுதல் செய்து அவர் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து சுமதியின் பெற்றோரிடமும் விடுதியில் உள்ள சக மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நர்சிங் மாணவி சுமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பூந்தமல்லி தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment