திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் M. G. R. சிலம்பாட்ட கலைக்கூட மாணவ மாணவிகள் 75வது ஆண்டு சுதந்திர இந்தியாவிற்கு மரியாதையும், நமது தமிழக அரசிற்கும் நன்றி செலுத்தும் வகையிலும், கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூர்ந்து சிலம்பம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆவடி ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா வில் சுமார் 30000 சதுர அடியில் 75 என்ற வரைந்து நின்று 75 நிமிடம் தொடர்ந்து சிலம்பு செய்து சாதனை புரிந்தனர்.
இந்த சாதனை இந்தியன் வேர்ல்ட் ரெக்காட்ஸ் என்ற சாதனை நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்க்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் லயன். டாக்டர். செந்தில் அரசு அவர்களால் ராமையா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியக்குமார், அண்ணபூரணா ஹோட்டல் உரிமையாளர் லயன். அண்ணாதுரை, வழக்கறிஞர் அந்திரிதாஸ், லயன். டாக்டர். ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment