தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்ப கேட்டுக்கொண்டதையடுத்து பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதியில் தீர்க்கப்படாத குறைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கான கூட்டம் பொன்னேரி பஜார் வீதியில் உள்ள சங்கர பாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான துரைசந்திரசேகர் கலந்து கொண்டு பொன்னேரி நகராட்சி வளர்ச்சி குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, துணைத் தலைவர் வக்கீல் விஜயகுமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை எம் எல் ஏ துரைசந்திரசேகரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment