இந்த நிலையில் கடந்த 22ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் அவரது பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி கடிதம் ஒன்றை எழுதி அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்.
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர், திருவேற்காடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி அலைந்த அந்த மாணவி 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பினார்.
தகவலறிந்த போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவேற்காடு செல்லியம்மன் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் நந்தகுமார்(53) என்பவர், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதை அறிந்த நந்தகுமார் தலைமறைவானார். இந்நிலையில், மகளிர் போலீசார் நேற்று அவரை போக்சோவில் கைது செய்தனர்.
பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாருக்கு 2 மனைவிகளும், 4 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment