ஸ்ரீ மகாசக்தி செல்லியம்மன் புத்துக்கோயில் 28 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

ஸ்ரீ மகாசக்தி செல்லியம்மன் புத்துக்கோயில் 28 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா.

திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகாசக்தி செல்லியம்மன் புத்துக்கோயில் 28 ஆம் ஆண்டு மாபெரும் தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


முன்னதாக கடந்த 26.8.2022 வெள்ளிகிழமை அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பதிவிளக்கு, கரகம் வீதி உலாவும், மறுநாள் சனிக்கிழமை தேவிகருமாரியம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம்  எடுத்து சென்றனர், பிறகு ஸ்ரீ மகாசக்தி  செல்லியம்மன் ஆலயத்தில் பால் அபிஷேகம் நடைபெற்றது.


முக்கிய நிகழ்வான  28.8.2022 (ஞாயிற்றுகிழமை) அன்று பகல் 3மணியளவில் செல்லியம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி அதனைதொடர்ந்து இரவு 9 மணியளவில் மாபெரும் தீ மிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவை தலைமை தாங்கி நடத்திய  3வது வார்டு வட்ட கழக செயலாளர் (திமுக) திரு .துரை கோபால், 3வது வார்டு உறுப்பினர் கோமதி துரைகோபால் மற்றும்  சிறப்பு  அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நகர மன்ற தலைவர் என்.இ.கே முர்த்தி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்  ஏ.ஜே.பவுல்(திமுக), N.ராஜி (திமுக), S.சங்கர்(திமுக), தொழிலதிபர் கோலடி கே.கே.ஆர் .கிருஷ்ணகுமார், தொழிலதிபர்  ஜோதிகுமார், வழக்கறிஞர் மணிகண்டன், திராவிட மூர்த்தி, v.முருகன் (நகர தலைவர் பாஜக),  தொழிலதிபர் S.சதீஷ் மற்றும் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad