புதிய குடியரசு தலைவராக திரௌபதி மூர்ம பாஜக செயற்குழு கூட்டத்தில் நன்றி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

புதிய குடியரசு தலைவராக திரௌபதி மூர்ம பாஜக செயற்குழு கூட்டத்தில் நன்றி.

புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி மூர்முவுக்கு  பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  சோழவரம் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பஞ்செட்டி பகுதி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் சரவணன் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் எம் பாஸ்கரன், மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ஆழிஞ் சிவாக்கம் ஆர்.சி. பாலாஜி,மாவட்ட பொது செயலாளர் அன்பாலயா சிவக்குமார், ஆண்டார்குப்பம் ஊராட்சிமன்ற துணைத்தலை வரும் மாவட்ட செயலாளர் நீலகண்டன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கார்த்திக் டில்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. 


தமிழகத்தின் வளர்ச்சிக்காக 31,400 கோடி மதிப்பீட்டல் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த மத்திய அரசுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது, 


நாட்டு மக்களுக்காக 200 கோடிக்கு மேலான தடுப்பூசியில் வழங்கிய பாரத பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, 


தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக செயல்பட்டு கொண்டு தன்னுடைய ஓராண்டு கால பயணத்தில் ஆளும் கட்சியின் ஊழல் குற்றங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது மாநில தலைவர் கே அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிப்பது,


சுமார் 125 ஆண்டுகள் பழமை நிறைந்த ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க பலமுறை பாஜக சார்பாக பேரூராட்சி அலுவலகத்தை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக் காததை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வது, 


ஆரணி பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போது மான மருத்துவர்கள், செவிலியர் கள் இல்லாததால் நிலையில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் அமைக்கவும்  பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வது, 


அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சிலம்பத்தம்மன் கோயில் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி பழுதடை ந்து நிலையில் வீடுகளுக்கும் பொது மக்களும் பயன்பாட்டிற்கு சரியாக தண்ணீர் வராததால் புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர கூறுவது, 


அஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள தாமரைக் குளம் பராமரிப்பு இல்லாத நிலையில் அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்காக வும், நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பாதை அமைத்து தர வேண்டிய தெரிவிப்பது, 


பஞ்செட்டி கிராமத்தில் உள்ள கிரோபேஸ்ட் இறால் தொழிற் சாலையில் இருந்து இரவு நேரங்களில் துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் அதை தடுக்க மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad