திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றிய ஞாயிறு ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத ஸ்ரீ புஷ்பரதேஷ்வரர் கோயில் உள்ளது கோவில் பக்தர்கள் வசதிக்காக அத்திப்பேடு பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள நாடி தொழிற்சாலை சார்பில் புதியதாக சமூக குளியலறை, கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், லையன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் காத்தார், தலைவர் சீனிவாசன், செயலாளர் கீதா குமார், சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன், நாடி தொழிற்சாலை மேனேஜர் மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞாயிறு எல்லையன், அருமந்தை விக்ரமன், ஞாயிறு துணைத் தலைவர் ஜனார்த்தனன், உறுப்பினர் சதீஷ், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார், சென்னை மாதவரம் மில்க் காலனி மாதவரம் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment