திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 232 மனுக்களை அளித்தனர். 


அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், வீதம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார். 


இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad