சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஹரிவராசனம் பாடல் ஒளிக்கப்படுகிறது இந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன நிலையில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு தேசியத் தலைவர் டி.பி.சேகர் தலைமை தாங்கினார் விழாவை கவர்னர்கள் ஆர்.என் ரவி , டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் சுவாமி சிதரனந்தா மகராஜ், மித்ரானந்தா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா 18 மாதங்கள் கொண்டாடப்படுகிறது இதற்கான சின்னத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது உலகில் உள்ள மற்ற நாடுகள் போல் ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் உருவாக்கப்படவில்லை. மாறாகரிஷிகள், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.தர்மம் என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல, கீ.மு 2 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை சனாதன தர்மம்தான் இந்தியாவை உருவாக்கியது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கவர்னர் டாக்டர். தமிழிசை சௌந்தராஜன் பேசுகையில் ஆன்மிகம் என்பதை விஞ்ஞானம் தான் தமிழகத்தில் ஐய்யப்பன் புகழ் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று தெரிவித்தார். விழாவில் பந்தள மகாராஜா பி.ஜி சசிகுமார் வர்மா, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன், மசோரம் முன்னாள் கவர்னர் குமணன் ராஜசேகரன், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், முல்லப்பள்ளி கிருஷ்ணன் நம்பூதிரி, உள்பட மராட்டியம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து ஐயப்பா பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக என் ராஜா வரவேற்றார் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். நூற்றாண்டு விழா குறித்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறும்போது நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் குழந்தைகள், இளைய சமுதாயத்தினர் பெரியவர்கள் என அந்தந்த பிரிவினர்களுக்கு ஏற்ப கலை நிகழ்ச்சிகள் ஆன்மீக வினாடி-வினா கருத்தரங்கம் கலந்தாய்வு ஓவியப்போட்டி நாட்டிய நிகழ்ச்சி மற்றும் மாநில வாரியாக ரதயாத்திரை போன்றவை நடத்த திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் 20, 21 தேதிகளில் திருவனந்தபுரத்தில் பிரம்மாண்ட நிறைவு விழா நடைபெறுகிறது என்றார்.
No comments:
Post a Comment