![]() |
மாதிரி படம். |
சர்வே நம்பர் 120-ற்குட்பட்ட சிறுகாவூர் ஏரியின் இரண்டாவது பகுதி கூகுள் மேப்பில் இருந்தும். ஏரியின் பாதி பகுதியை ஆக்கிரமித்து லே-அவுட் அமைத்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருவதை எதிர்த்து சமூக அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஆக்கிரமிப்பில் சில முக்கிய பிரமுகர்களுக்கு பங்குள்ளது என்று ஊருக்கே தெரிந்த விசயமாக உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி அளிக்கப்படும் புகார்களின் சம்மந்தமாக வரும் எதிர்ப்புகளை அதிகாரத்தை சாதகமாக பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் அரசு அதிகாரிகளுடன் மெகா கூட்டணி அமைத்து ஆக்கிரமிப்புகளை தக்க வைத்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு இதுகுறித்து தெரிந்திருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க முன் வராதது கேள்விகுறியாகவேவுள்ளது, 2021-ல் பெய்த கனமழையில் மழைநீர் வெளியேற முடியாமல் அப்பகுதி மக்கள் சிக்கி தவித்தது அங்கு வசிக்கும் மக்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.
விளாங்காடுபாக்கம் ஊராட்சிற்குட்பட்ட சிறுகாவூர் ஏரியை கூர் போட்டு விற்பனை செய்து கோட்டீஸ்வரர்களாக வலம் வரும் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் மீது எதிர்ப்பு தெரிவித்தவர்களை தாக்கிய சம்பவமும் சமீபத்தில் அறங்கேறியுள்ளது, தாக்குதல் சம்பவத்தின் போது அருகிலிருந்த காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது ஆக்கிரமிப்பாளர்களுக்கு காவல்துறை ஆதரவும் அதிகம் உண்டு என்பது தெள்ள தெளிவாகிறது.
இதனால் சமூக ஆர்வலர்களின் மனது வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது., ஏரியை ஆட்டய போட்டவர்களுக்கு கூஜா தூக்கும் பொன்னேரி தாலுக்கா அலுவலர்கள் உறுதுணையாக இருக்கும் போது ஏரிகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைவசம் தஞ்சம் புகும் என்பது உண்மை.
சமூக ஆர்வலர்களின் தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்காததால், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டிற்குள் மக்கள் பிரச்சினையை தீர்த்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளங்காடுபாக்கம் சிறுகாவூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற தனி கவனம் செலுத்தி, அக்கிரமிப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் ஒழியே ஆக்கிரமிப்பை அகற்ற வேறு வழி இல்லை என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவுள்ளது..!
மாண்புமிகு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து ஏரியை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பை முதல்வர் நிறைவேற்றுவாரா..!
No comments:
Post a Comment