இக்கூட்டத்தில் லாரிகளில் அளவுக்கு அதிகமான மண் பாரம் ஏற்றி செல்வது, நகர்ப்புற சாலையில் வேகமாகவும் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவது, பின்புறம் ஏற்றும் சரக்கை தார்பாலின் கொண்டு மூடாமலும் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பயன் படுத்தியும் வாகனங்களை இயக்குவதே விபத்துகளுக்கு காரணம் எனவும், இவைகளை எவ்வாறு தடுக்கலாம் என்று சமீபத்தில் டிப்பர் லாரிகளால் நடந்த உயிரிழப்பு விபத்துக்களை மேற்கொள் காட்டி மிகவும் கண்டிப்புடன் விளக்கமளித்தார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் குவாரி நிர்வாகிகள் ரகு, பிரதாப், திருவள்ளூர் சங்க தலைவர் சதீஷ் சவுக்கார் பாண்டியன், பூந்தமல்லி சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செங்குன்றம் சங்கத் தலைவர் காமராஜர், வெள்ளவேடு சங்கத் தலைவர் ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட அனைத்து பகுதி லாரி உரிமையாளர்கள் மண் அள்ளும் ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுமார் 150 நபர்கள் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடை பெற்ற இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் அவர்களின் விளக்கவுரையின் இடையிடையே கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்து சட்ட விதிமுறைகளையும் எளிமையாக எடுத்து கூறி அனைவருக்கும் அவர்களின் தவறுகளை உணரவைத்தார்.
இறுதியாக லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒருமனதாக ரீப்பர்களை அகற்றி விடுவதாகவும், தத்தம் ஓட்டுநர்களிடம் பொதுநலன் கருதி வாகனங்களை முறையாகவும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டும் விபத்துக்கள் ஏற்படாமலும் இயக்க அறிவுறுத்தி திருவள்ளூர் மாவட்ட பகுதியில் சாலை விபத்துக்களே இல்லாமல் செய்வோம் என உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment