இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ லியோனி, தமிழ்நாட்டு பெண்களுக்கு திமுக அரசின் ஓராண்டு திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், காவல்துறையின் கடமை உணர்வு குறித்தும் அவர்களுக்கு திமுக அரசு செய்து வரும் நன்மைகள் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
மேலும், ஒரு சிறுகதையின் மூலம் காவல்துறை குறித்து விமர்னம் செய்கையில், ஒரு காவலரின் மனைவி தான் ஒரு மோசமான காவலரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அவர் எப்பொழுதும் குச்சியைக் கொண்டு என்னை அடிப்பதாகவும் கூறினார். அப்போது அந்த சமயத்தில் ரூ.50 கொடுத்தால் வாங்கிக்கொண்டு பேசாமல் போய் விடுவார் என காவலரின் மனைவி சொல்வது போன்ற கருத்தை எடுத்து வைத்து நகைச்சுவையாக பேசினார்.
No comments:
Post a Comment