திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆண்டார்குப்பம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள வைரவன் குப்பம் திமுக கிளை கழகம் சார்பில் கலைஞரின் நினைவு கம்பம் மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏவுமான டி.ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கிவைத்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றியகவுன்சிலர் பத்மபிரியா நாகராஜன், ஆகியோர் வரவேற்றனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பகலவன்,வைரம் குப்பம் கிளை பொறுப்பாளர்கள் பாளையம், ஜெயச்சந்திரன், பிரகாசம் கலைச்செல்வன், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment