திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் பகுதிகளில் 34 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 400 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.
அப்போது பல்வேறு குறைபாடுகள் இருந்த வாகனத்தை கண்டுபிடித்து அதனை சீர் செய்து பின்னர் வந்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த ஆய்வினை பொன்னேரி ஆர்.டி.ஒ. காயத்ரி சுப்ரமணியம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், ஆகியோர் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment