இன்று (16.06.2022) நடைப்பெற்ற பள்ளி வாகனங்கள் வருடாந்திர சிறப்பு கூட்டாய்வு, காவல் கண்காணிப்பாளர் அலுவலக திடலில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் 105 பள்ளி வாகனங்கள் சிறப்பு குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 83 வாகனங்கள் சரியாக உள்ளதை அனுமதித்தும் 20 வாகனங்கள் சிறு குறைகளுக்காகவும் 2 வாகனங்கள் மறுக்கப்பட்டு தகுதிச்சான்று தற்காலிக நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறை சார்பாக தீ ஏற்பட்டால் எப்படி அணைப்பது, பள்ளி வாகனங்களில் உள்ள தீ அணைப்பாணை எப்படி பயன்படுத்துவது என்றும் நிகழ்த்திக்காட்டப்பட்டது.
இம்முகாமில் இலவச கண் மருத்துவ பரிசோதனை பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 82 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து 37 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டும் 6 நபர்களுக்கு இலவச கண்சிகிச்சை செய்யவும் சென்னை அழைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment