இதில் சுமார் 250 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தையற் கூலியுடன் சீருடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தொழிலாளர் நலன் (ம) திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டுவந்த அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு வழங்காமல் தேக்கி வைக்கப்பட்டிருந்த விதிகளை மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனடியாக வழங்கினார். மேலும் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை அறிவித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டதாக கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் கிழக்குப் பகுதி செயலாளர் நாகராஜ், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பிகே மூர்த்தி மாமன்ற உறுப்பினர்கள் டிஎஸ்பி ராஜகோபால், ரமேஷ், எல்.பி.எஃப் மோகன், சாந்தகுமாரி, நாகவள்ளி, பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment