திருவள்ளுர் அருகே நம்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

திருவள்ளுர் அருகே நம்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்.


திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தில் ஊத்துக்கோட்டை வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.


இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சீ.கோவிந்தராஜன், தாசில்தார் ரமேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், திமுக ஒன்றிய செயலாளர் பெரிஞ்சேரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டார் .


இதில், மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் பேசும்போது, 'இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மொத்தம் 414 மனுக்கள் வந்தது. அதில், 407 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், முதியோர் உதவித்தொகை 200 பேருக்கும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை 2 பேருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 62 பேருக்கும், பழங்குடியின சான்று 206 பேருக்கும், நலவாரிய அட்டை 77 பேருக்கும், வீட்டுமனை பட்டா 14 பேருக்கும், மருத்துவ காப்பீட்டு அட்டை 40 பேருக்கும் புதிய மின்னனு குடும்ப அட்டை 105 பேருக்கும், பட்டா மாறுதல் 1 என மொத்தம் 697 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் மதிப்பு ₹ 13 லட்சத்து 80 ஆயிரத்து 496 ஆகும். மேலும், கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது தான் மீண்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இனிமேல், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் நடைபெறும் என ஆட்சியர் பேசினார். இதில், திமுக நிர்வாகிகள் நாகராஜ், சுப்பிரமணி, வேணுகோபால், ஞானமணி, ஞானமுத்து, தேவி, ஆகியோர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad