சென்னை அடுத்த மணலி புதுநகர் அருகே உள்ளது சின்ன ஈச்சங்குழி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயில் தற்போது சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதுப் பிக்கப்பட்டு மூன்று தினங்களாக சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பொன்னேரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், 15-வது வட்ட கவுன்சிலர் நந்தினி சண்முகம், வட்டச்செயலர் முரளி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமனோர் சுவாமியை வழிபட்டனர்.
அப்போது கும்பாபிஷேகம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட் டது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்தவாறு பங்கேற்னர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துலுக்காணத்தம்மன் கோயில் விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment