கடந்த ஆறுமாதம் முன்பு மோகன்குமார் பிரபுவிடம் கடனாக பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் மோகன்குமார் பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து இழுத்தடித்தாக கூறப்படுகிறது கொடுத்த பணத்தை பிரபு வாங்க அவ்வபோது மோகன்குமார் வீட்டிற்கு சென்று கேட்டு வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பிரபுவுக்கும் மோகன்குமார்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது அப்போது மோகன்குமார் ஒரு மாதத்தில் பணத்தை எப்படியாவது புரட்டி தந்துவிடுவதாக பிரபுவிடம் கூறியுள்ளார் ஆனால் பணத்தை இதுவரையில் தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல மோகன் குமார் தண்ணீர் உபயோகத்திற்கான தண்ணீர் டிராக்டர் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரபு மற்றும் அவரது நண்பர்கள் மோகன்குமாரை மீண்டும் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் மோகன் குமார் மற்றும் பிரபு ஆகியோர் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த பிரபு, சதீஷ் உட்பட 3 பேர் லாரிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு ராடை கொண்டு மோகன்குமாரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில் மோகன்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறை தேடி வருகிறார்கள்..
No comments:
Post a Comment