இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதுமட்டுமில்லாமல் தண்டுப்பகுதி மற்றும் வெங்கடாபுரம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளும் சரிவர அல்ல படவில்லை என்றும் குற்றச்சாட்டு வருகிறது அலுவலகத்தில் சென்று புகார் அளித்தால் உங்கள் கவுன்சிலிடம் கூறுங்கள் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்து குப்பையை தினமும் அகற்ற வேண்டியும் சாலையை விரைவில் சீர்ப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான 3.06.2022 இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இக்கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிப்புக்கு உள்ளாகின இதனால் வாகன ஓட்டிகளும் மிக சிரமத்திற்கு உள்ளாகினர் அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளிடையே நேரிடையாகச் சென்று மனுக்கள் கொடுத்தால் உங்கள் கவுன்சில் மூலம் வாருங்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டுமே அதிகாரிகள் நேரில் வந்து உடனடியாக வேலையை செய்து தருகிறோம் என்று உத்தரவாதம் செய்கின்றன எந்த வேலை செய்ய வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா என்ன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இது தொடருமானால் இந்த நல்லாட்சிக்கு அவபெயர் ஏற்ப்படும் என்றும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment