திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இதில் குடிப்பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் மறுவாழ்வு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பிச் சென்று சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடியவர்களில் 8 பேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு மீண்டும் திரும்பி வந்தனர். மேலும் தப்பியோடிய 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களை மையத்தில் சிகிச்சை அளித்து அவர்கள் தாக்கியதால் தப்பிச் சென்றார்களா அல்லது அவர்கள் தப்பி சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்
No comments:
Post a Comment