ஆவடி அருகே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் முப்பத்தி எட்டாவது பிறந்தநாள் விழா பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாவட்ட அணி தலைவர் ராஜேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மயிலாட்டம் ஒயிலாட்டம் சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாஜக ஓபிசி அணி மாநிலத்தலைவர் லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்வின், மாவட்ட செயலாளர் எஸ் கே எஸ் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் சுற்றுப் பகுதியில் வசிக்கும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, 1138 நபர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் புடவை வழங்கினர்.
பின்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி ஆடைகள் வழங்கப்பட்டன, இந்நிகழ்ச்சியில் சிறப்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பத்தில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கினார், பின்னர் அனைத்து நபர்களுக்கும் அறுசுவை உணவுகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment