டி10 திருமுல்லைவாயல் காவல் நிலைய காவல் எல்லைக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியை சார்ந்த ஆறுமுகநாதன் (33) இரண்டாவது தெரு வைஷ்ணவி நகர் திருமுல்லைவாயல் சென்னை 62 என்பவர் அன்னூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் THE DEE STUDIO என்ற பெயரில் கடந்த எட்டு வருடமாக போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
நேற்று 16.06.22ம்தேதி 21.00 மணிக்கு கடையை பூட்டி விட்டு இன்று 17.6.22 காலை 09.15 மணிக்கு கடையை திறக்க வந்தபோது சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த நிக்கான் கேமரா மற்றும் கல்லா பெட்டியில் இருந்த சுமார் 2000 ரூபாய் பணம் திருடு போனதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment