இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ வுமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஏ.ஆர்.டி. உதயசூரியன், முரளிதரன், லோகேஷ், மோகன்பாபு, ஆனந்தகுமார், தில்லை குமார் ஆகியோர் வரவேற்றனர்.
ஒன்றியசெயலாளர்கள் சுகுமாரன் ரமேஷ் ராஜ், செல்வசேகரன், பொன்னேரி நகரமன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மோகன்ராஜ், வெங்கடேசன், தமிழ் உதயன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் சா.மு.நாசர், மனுஷ்யபுத்திரன், மதிமாறன், ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சி.எஸ் சேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான வெற்றி என்கின்ற ராஜேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment