அதன்படி 4-வது வருடமாக 120 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன, மெதூர் அரசு பள்ளி 12-ஆம் வகுப் பில் முதலாவதாக தேர்ச்சி பெற்ற லட்சுமிப்ரியாவிற்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. மெதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராமப் புற செவிலியர்களுக்கு கிராமத்திற்கு சென்று பரிசோதனை செய்வதற்காக ரத்த அழுத்த பரிசோத னை கருவி 6 பேருக்கு வழங்கபட் டது.
இதனை கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கற்கை நன்றே தலைவர் வடிவேல், செயலாளர் நவீன் குமார், பொருளாளர் கார்த்திக், உறுப்பினர்கள் அருண் குமார், கிஷோர்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில்ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரன், செல்வசேகரன், குழந்தைகள் காப்பக நிறுவனர் கலாராணி, அன்புக்கொடி நல்ல தம்பி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன், ஊராட்சி செயலாளர் சவுந்தராஜன், தமிழ்நாடு பத்திரி கையாளர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் பாலகிருஷ் ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment