பூவரசன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பூண்டி அருகே ராமதண்டலம் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். பூவரசன், மனைவியின் சகோதரன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது
அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சாலையில் இறந்து கிடந்தவர் பூவரசன் என்றும், விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இவர் விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment