வாகன சோதனையின்போது டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி 3 பேர் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

வாகன சோதனையின்போது டன் கணக்கில் சிக்கிய ரேஷன் அரிசி 3 பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


அந்த தகவலின்படி காவல்துறையினர் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 4200 கிலோ ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்லப்படுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் பெத்தராமன், மதன், சரவணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரியையும் பறிமுதல் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad