தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூவிருந்தவல்லி வரை செல்லும் 66A சென்னை மாநகர அரசு பேருந்து செல்கின்றன தற்போது பள்ளி திறந்த நிலையில் மாணவ மாணவிகள் பூவிருந்தவல்லியில் இருந்து குன்றத்தூர், பம்மல், பல்லாவரம் வழியாக செல்கின்றனர்.
தினந்தோறும் காலை பள்ளி நேரத்தில் குறைவான மாநகர பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர் குறித்த நேரத்தில் பேருந்து இயக்கப்படாமல் பேருந்து காலதாமதமாக இயக்கப்படுவதால் தினந்தோறும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் அதேபோல் இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் குறைவான பேருந்து இயக்கப்படுவதால் பணியில் இருந்து வீடு திரும்புவோர் அவதிப்படுகின்றனர்.
இதை குறித்து புகார்களை தாம்பரம் பேருந்து நிலைய அதிகாரிகள் இடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர் இதை சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லை எனில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment