திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சுந்தரசோழபுரம் லிங்க் சாலையில் ஏரி உள்ளது, இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த சாலை வழியாக தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கோயில் நகரமான திருவேற்காடு பகுதிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்..இதனை கருத்தில் கொள்ளாமல் திருவேற்காடு நகராட்சி அலட்சியமாக செயல்படுகின்றது.இந்த சுந்தரசோழபுரம் லிங்க் சாலையில் ஏரி பகுதியான அப்பகுதியில் குப்பைகள், இறைச்சி மற்றும் கழிவுநீர் அனைத்தையும் கொட்டபடுகின்றது.
இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும் மூக்கை மூடி கொண்டு செல்லும் சூழ்நிலையே நிலவி வருகிறது ..மேலும் அதிகபடியான குப்பைகளால் சுற்றுசூழல் மாசு அடைவதுடன் , கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் இடமாக மாறி வருகிறது, திருவேற்காடு கோயில் நகரமாக திகழ்வதால் இப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வரும் வேளையில் நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற குப்பைகளை முறையாக அப்புறபடுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சுந்தரசோழபுரம் லிங்க் சாலை ஏரி பகுதியில் இருக்கின்ற குப்பை,இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதுடன் மீண்டும் இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டாதவாறு எச்சரிக்கை விளம்பர பதாகைகள் வைத்து மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment