இரண்டு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது வாகனம் பறிமுதல். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

இரண்டு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது வாகனம் பறிமுதல்.

திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் சாலை பார்ச்சுனர் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது அகில் (22) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது யமஹா R15  வாகனத்தை கடந்த 5.4.22 தேதி இரவு வீட்டின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்ததாகவும் மறுநாள் காலை பார்த்தபோது வாகனம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள்  வாகனத்தை திருடியது தெரியவந்தது, பூந்தமல்லி காடுவெட்டி ஆவடி பிரதான சாலையில் வசிக்கும் தினேஷ் பாபு (19) மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரம் காந்தி நகரில் வசிக்கும் கோபி (22) என தெரிய வந்தது அவர்களை நேற்று 8.6.22 தேதி அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வைத்து கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது எதிரிகளை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad